Showing posts with label Bharathiyar. Show all posts
Showing posts with label Bharathiyar. Show all posts

Monday, October 21, 2013

Bharathiyar - 2

He has written about a host of different things with so much passion. I like his poems which were a rally cry for nation-building, self reliance and building an equitable society. I like how progressive some of his ideas were and I am drawn to the invigorating intensity in his words. In a prejudiced, apathetic society, Bharathiyar screamed loud through his written words.

I find it contradictory that with such social and economic free thinking ideas, he was also religious and wrote a whole array of devotional hymns.

I have been reading few of his poems. I have quoted one of my favorites before, here. Few more lines I like:


பாரத ஜனங்களின் தற்கால நிலைமை:


நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
அஞ்சி யஞ்சி சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனை பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயரப்படுவார்; எண்ணி பயப்படுவார்;
(நெஞ்சு)

....
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன்  ரால்அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென் றுமகன் சொல்லி விட்டால்,
நெஞ்சு பிரிந்திடு வார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
(நெஞ்சு)
...

வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்:


ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இறந்குவாய் வா வா வா
ஏறு போல நடையினாய் வா வா வா
....

தமிழ்:


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலைமையெனின் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
...

பாரத தேசம்:
...
காவியம் செய்வோம்; நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்லருலை வளர்ப்போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய்வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்;
...


Sunday, March 17, 2013

Bharathiyar - 1

முரசு 

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம் ;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

கண்கள் இரண்டில் ஒன்றை - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளரிவை வளர்த்தல் - வையம்
பேதமை யற்றிடுங் காணீர் .

நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே! - பொய்மைச்
சாதி வகுப்பினை எல்லாம்.
...
அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

பாருக் குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது  - புவி
யெங்கும் விடுதலை செய்யும்

வயிறுக்கு சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம் ;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்

ஒன்றெண்டு கொட்டு முரசே! - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே! - இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

- பாரதியார்